தேர்தல் இடாப்பு மறுசீரமைப்பின்போது, தெரிந்தே இரட்டை அல்லது அதற்கு மேற்பட்ட முகவரிகளில் பதிவுகளை மேற்கொண்டுள்ள வாக்காளர்களுக்கு எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் ஒருவர், ஒரு இடத்தில் மாத்திரமே, பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள், கடந்த ஆண்டு, இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்து கொண்டமை தொடர்பில், வாக்காளர் இடாப்பின் மறுசீரமைப்பினூடாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய, சகல மேலதிக முகவரிகளையும், தேர்தல் இடாப்பிலிருந்து நீக்க, தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான குற்றச்செயல்களை புரிவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, தேர்தல்கள் செயலகம் வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment