பிரபாகரன் போரின் மூலம் அடைய முற்பட்ட ஈழக் கனவை நனவாக்க முயல்கின்றார் சம்பந்தன். சமீபத்தில் மட்டக்களப்பில் இடம் பெற்ற தமிழரசுக் கட்சி மாநாட்டில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவைலரான ஆர். சம்பந்தன் தான் ஒரு போதுமே தாயகக் கோட்பாட்டையும் தமிழர் தனியான தேசிய இனம் என்பதையும் கைவிட்டதில்லை என்றும் தமிழ் மக்களுக்கு உள்ளக சுயாட்சி பெற்றுக் கொடுப்பதே தமது நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நோக்கத்துடன் தான் 13 திருத்தம் தொடர்பாக அரசுடன் பேச முற்பட்டுள்ளதாவும். அது வெற்றி பெறாதுவிடின் பன்னாட்டு மக்களின் துணையோடு வெளியக சுயாட்சி நோக்கி செல்லப் போவதாவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, அவர் இவ்வாறு தேசத் துரோகக் கூற்றுக்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான பிரியன்ஜித் விதாரன தனது கையொப்பத்துடனான கடித மூலம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment