Thursday, June 7, 2012

லண்டனில் முஸ்லிம் புலம் பெயந்தோர் அமைப்பு ஜனாதிபதியை சந்திப்பு

பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பு நேற்று புதன் கிழமை (06 .06 .2012 ) லண்டன் பார்க் லேனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து ,கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியது.

இதில் ஜனாதிபதி, 'முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பு' அண்மைக் காலமாக தாய் நாட்டுக்கு செய்து வருகின்ற முக்கிய பங்களிப்புகளுக்காக தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டதுடன் தொடர்ந்தும் இவ்வமைப்பின் உதவியும் ஒத்தாசையும் நமது தாய் நாட்டை சுவீட்சப் பாதையில் கட்டியெழுப்ப அவசியம் தேவை என்றார்.

இறுதியில், இந்தப் புலம் பெயர்ந்த அமைப்பின் உறுப்பினர்கள், தமது எதிர்கால திட்டங்கள் பற்றியும் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் சமகாலத்தில் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகள் பற்றியும் எடுத்துக் கூறினர்.

இச்சத்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரித்தானியக் கிளையும் கலந்து கொண்டது.

1 comment:

  1. They really respect the country by respecting the president of their
    country to which they belongs to.A
    harmonious combination.Very pleasant to see them together.Hope they would work harmoniously together.

    ReplyDelete