தப்பி வரும் குடி மக்களைப் புலிகள் சுடுவதை பார்த்தேன் - இலங்கைக்கான ரஷ்ய தூதுவர்
இலங்கைத் தலைவர்கள் பயங்கர வாதத்தை ஒழிக்கும் போரில் கூடியளவு உயிர்ச் சேதத்தைத் தவிர்க்கவே முயற்சித்ததுடன், பயங்கர வாதத்தை ஒழிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு மார்க்கம் இருக்க வில்லை என, தனது நான்காண்டு பதவிக்காலம் முடிந்து தாய் நாடு செல்ல விருக்கும இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் விளாடிமிர் மிக்காய்லோவ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கோல்பேஸ் ஓட்டலில் நடைபெற்ற ரஷ்ய தின விழாவில் உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தப்பி வரும் குடி மக்களைப் புலிகள் சுடுவதைத் தான் பல வீடியோக்களில் பார்த்தாகவும், அவற்றில் புலிகள் பொது மக்களை பணயக் கைதிகளாகத் தடுத்து வைத்திருந்த்தைக் கண்டதாகவும் குறிப்பிட்ட அவர், ரஷ்யா எப்போதும் இலங்கையின் பக்கமாகவே நின்றதாகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுதும் இலங்கையின் முயற்சிக்கு ரஷ்கா ஆதரவு வழங்குதாவும் கூறினார்.
அத்துடன், மனிதவுரிமைகளைப் பாதுகாத்த,ல் அரசியல் பொருளாதார சமூக நலன்களை மேம்படுத்தல், என்பவற்றை அந்தந்த நாடுகளே செய்து கொள்ள வேண்டும் என்றும், இவற்றைக் கூறிக் கொண்டு வேறு நாடுகள் அவற்றில் தலையிடக் கூடாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment