Tuesday, June 26, 2012

வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விளை நிலங்களுக்கு நட்ட ஈடுகளை வழங்குக- ஜனாதிபதி

வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விளை நிலங்களுக்கு நட்ட ஈடுகளை துரித கதியில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார்.

வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள வடமத்திய மாகாண விவசாயிகளின் நெருக்கடிகளை தீர்ப்பது தொடர்பாக அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட பேச்சுவார்ததையிலேயே, ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை வழங்கியள்ளார்.

பொது திறைசேரி, நீர்ப்பாசன திணைக்களம், கமநல சேவைகள் மற்றும் வனவள திணைக்களம், விவசாய அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகியவற்றை உள்ளடக்கக்கூடியவாறு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவூடாக நட்டஈடு செலுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

அத்துடன் வறட்சியினால் பல குளங்கள் தூர்ந்து போகும் நிலை எட்டியுள்ளதனால் குளங்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

விளை நில கிணறுகள், இயந்திர உபகரணங்கள், விவசாயிகளுக்கு தேவையான நீர் பம்பிகளையும் வழங்கி, எதிர்வரும் போகத்திற்கு தேவையான விதைகளை பாதுகாக்கவும், விவசாய கடன் உதவிகளை நிவாரண அடிப்படையில் வழங்குவது குறித்தும், இப்பேச்சுவார்த்தையின்போது, விரிவாக ஆராயப்பட்டன.

அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, பசில் ராஜபக்ஷ, எஸ்.எம். சந்திரசேன, திஸ்ஸ கரலியத்த, மஹிந்த அமரவீர, மஹிந்த யாப்பா அபேவர்தன, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்டோரும், இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment