முஸ்லிம் காங்கிரஸ் உடன் எந்தவித ஒப்பந்தமும் செய்யமாட்டாது - அரசாங்கம்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு , 13ம் திருத்தம் மற்றும் கோரிக்கைகளுக்கு இணங்கி அரசாங்கம் முஸ்லிம் காங்கிரசோடு எந்தவித புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளாது என்று தெரிய வருகின்றது.
2010 சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கட்சியோடு செயல்பட்டது. இக்கட்சி இப்பொழுது தமிழ் கூட்டணியுடன் சேர்ந்து இயங்குவது வெளிப்படையாக தெரிகின்றது என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர், முதலமைச்சர் பதவி கோரியது முஸ்லிம் காங்கிரஸ். ஜனாதிபதி மறுத்து விட்டார். பொலிஸ் அதிகாரம் வேண்டுமென்றும் மு.கா. கேட்டுள்ளது. கடந்த தேர்தலின் பின்னர் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றியே முகா. அரசுடன் இணைந்தது என்று அவ் வட்டாரங்கள் கூறுகின்றன.
0 comments :
Post a Comment