அவுஸ்திரேலியா சென்ற படகு ஆழ்கடலில் குடை சாய்ந்ததில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை
அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக் கருகில் சட்டவிரோத குடியேற்றக் காரர்கள் சென்ற படகு ஆழ்கடலில் குடை சாய்ந்ததில், படகில் இருந்து மீட்கப்பட்ட 110 பேரில் இலங்கையர்கள் எவரும் இல்லை என அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எட்மிரல் திஸர சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தப் படகில் 200 பேர் வரை பயணம் மேற்கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாகவும், இதில் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக மேற்கு அவுத்திரேலியாவின் பொலிஸ் ஆணையாளர் கார்ல் ஓ'கலகனின் கூற்றை ஆதாரமாகக் கொண்டு சிட்னி மோனிங் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தோனேசியா மற்றும் அவுத்திரேலியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தினரும் நிலைமையைக் கண்காணித்து வருவதாக இலங்கை வெளிநாட்டமைச்சு கொழும்பு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment