இலங்கை படைத்திறனை வளப்படுத்த அமெரிக்க, இந்திய மேலும் உதவி !.
இலங்கைப் பாதுகாப்பு படையினரின் திறனை வளப்படுத்தல் பயிற்சித் திட்டத்துக்கு உதவியளிப்பதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் சாதகமாகப் பதிலளித்திருப்பதாக அறிய முடிகிறது. சிங்கப்பூரில் நடைபெறும் ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கே இவ்வாறு சாதகமான பதில் கிடைத்துள்ளது. வெளிநாட்டமைச்சர் பேரா.ஜி.எல்.பீரிசின் தலைமையிலான இலங்கைக் குழு அமெரிக்க பணித்தொகுதியினரின் இணைத் தலைமைகளின் தலைவர் ஜெனரல் மார்ட்டின் டெம்சி மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது. இச் சந்திப்பு சங்கிரி-லா ஹோட்டலில் இடம் பெற்றுள்ளது.
உண்ணாட்டுத் தயாரிப்பான நடவடிக்கைத் திட்டத்தின் ஊடாக தேசிய ஒருமைப்பாடு, மறுவாழ்வு, கட்டிடமறுசீரமைப்புகள் மற்றும் சமூக-பொராதார வளர்ச்சியை போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஏற்படுத்தி வருவதாக பேரா. பீரிஸ் விலாவாரியாக எடுத்துரைத்ததாக தெரிய வருகின்றது. இந்தப் பகுதிகளில் உறுதியான முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாக இந்தியவும் அமெரிக்காவும் பாராட்டியதாகவும், நிலையான அமைதியை ஏற்படுத்தும் முயற்சிக்கு உதவுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவ்விருநாடுகளும் கூறியுள்ளதாகவும் அறியக்கிடக்கின்றது.
0 comments :
Post a Comment