Friday, June 29, 2012

கடந்த முறை தமிழருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்ததால் இம்முறை எமக்கு அதை தாருங்கள்

கடந்த முறை கிழக்கு மாகாண சபையில் தமிழருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்ததால் இம்முறை முஸ்லிம் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டுமெனவும், முஸ்லிம் காங்கிசுக்கு முதலமைச்சர் பதவி வழங்க முன்வரும் எந்த பெரும்பான்மைக் கட்சியுடனும் சேர்வோம், அல்லது தனியாகவே தேர்தலைச் சந்திப்போம் என முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் சபீக் ரசாப்தீன் திவயின பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

கிழக்கின் பெரும்பாலான அடிமட்ட உறுப்பினர்களின் விருப்பம் தனியாக தேர்தலைச் சந்திப்பதே எனவும், இரண்டு பிரதான கட்சிகளுடன் இது தொடர்பாக விரைவில் பேச இருப்பதாகவும், ஏற்கனவே இரண்டு முறை தமிழர் கூட்டணியுடன் பேசியிருப்பதாகவும், முடிவு எட்டப்படவில்லையெனவும். சபீக் ரசாப்தீன் கூறியுள்ளார்.

அத்துடன் காங்கிரசின் அதியுயர் பீடம் இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com