கொழும்பு நகரம் வெளிநாட்டு முதலீட் டாளர்களைக் கவரும் இடமாகவும், சுற்றுலா மையமாகவும் காணப்படு வதாலும், பல்வேறு செயற்றிட்டங்கள் ஊடாக அதனை அபிவிருத்தி செய்வதற்கு மிகப் பெருந் தொகையை அரசாங்கம் செலவழிக்கின்றது என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன். கொழும்பு நகரம் நாட்டின் முழு மக்களுக்கும் சொந்தமாக இருக்கின்றது. எனவே கொழும்பு நகரில், போதைப் பொருட்கள், பாதள உலகக் குழுக்கள், டெங்கு போன்றவற்றை ஒழிப்பதற்கு அரசு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கு பொது மக்கள் மிக முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என தெரிவித்தபாதுகாப்புச் செயலாளர், குறைந்த வருமானம் உள்ள மக்களுக்கு 10,000 வீடுகளை கொழும்பில் அமைப்பதற்கு ஆரம்பித்துள்ளதாகவும், மேலும் வீடுகளை அமைக்கும் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபைக்கு அசுத்த நீர் அகற்றல் செயற்பாடுகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட 164 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 'மொபைல் ஜெட்டிங்' இயந்திரத்தை கையளிக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய போதே பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முசம்மில், அமைச்சர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment