Saturday, June 16, 2012

இறந்த புலிகளின் படங்களை வீடுகளில் வைத்திருப்பதற்கு தடையில்லை -இராணுவ தளபதி

இலங்கை அரச படையினருக்கு எதிரான யுத்த்தில் ஈடுபட்ட புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இறந்தவர்களின் படங்களை பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் வைத்திருப்பதற்கு எந்த விதமான தடையும் இல்லை என கிளிநொச்சி மாவட்ட இராணுவ தளபதி பிரிகேடியர் ரேணுகா ரொவல் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முறிகண்டியில் நிலப்பிரச்சினை தொடர்பான சந்திப்பில் அப்பகுதி மக்கள் மத்தியில் உரையாற்றிய பொழுதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி பகுதியில் வசித்து வந்த மக்கள் இறுதி கட்ட யுத்தத்தின் போது தமது உடமைகளை இழந்து இடம் பெயர்ந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மக்களை மீள் குடியேற்ற இராணுவத்தினர் வீடுகளையும் அமைத்து கொடுத்தனர்.

இவ்வாறு அமைத்து கொடுக்கப்பட்ட வீடுகளில் குடியேறிய மக்கள் தமது குடும்பங்களிலிருந்து புலிகள் அமைப்பில் இணைந்து உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை காட்சிபடுத்தியுள்ளனர்.

இதன்போது, இராணுவத்தினர் குறித்த புகைப்படங்களை காட்சி படுத்தவேண்டாம் என மக்களை அச்சுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் மக்கள் கிளிநொச்சி மாவட்ட இரணுவத்தளபதியிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்தே குறித்த புகைப்படங்களை காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், புலிகள் அமைப்பில் உறுப்பினராக செயற்பட்டவர்கள் அவர்களின் உறவினர்களே அவர் புகைப்படங்களை காட்சிபடுத்துவதில் தவறில்லை என்பதோடு இதனை இராணுவத்தினர் தடைசெய்ய கூடாது என தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com