Tuesday, June 19, 2012

ஜூலாம்பிட்டிய அமரே நீதிமன்றில் சரண்: விளக்கமறியலில் வைக்க உத்தரவு

ஹம்பாந்தோட்டை – கட்டுவன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தங்காலை மேல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

பல்வேறு குற்றச்செயல் தொடர்பாக தேடப்பட்டு வந்த கீங்கனகமகே அமரசிறி எனப்படும் ஜூலாம்பிட்டிய அமரே என்பவரே தங்காலை மேல் நீதிமன்றில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முன்னர் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பாகவே அவர் நீதிமன்றில் சரணடைந்துள்ளார் எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

2002 ஆம் ஆண்டு அவர் சிறையிலிருந்து தப்பிச்சென்றிருந்தார் எனவும் மித்தெனியவில் இடம்பெற்ற கொலை தொடர்பாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது எனவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, நீதிமன்றில் ஆஜரான கொலை சந்தேகநபர் கீங்கனகமகே அமரசிறி எனப்படும் ஜூலம்பிட்டி அமரே தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுபடி நாளை 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com