லண்டனில் ஜனாதிபதியை வரவேற்கத் திரண்ட பிரித்தானிய ஸ்ரீ ல மு பு அமைப்பினர்
ஜனாதிபதி மகிந்த ராஜபகஷ,எலிசபத் மகா ராணியின் அறுபது ஆண்டுகள் பூர்த்தியான வைர விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஞாயிற்றுக் கிழமை லண்டன் வந்திருந்தார். பார்க் லேன் ஹில்டன் ஹோட்டலில் தங்கியிருந்த ஜனாதிபதிக்கு ஆதரவாக நேற்று திங்கட் கிழமை (04 .06 .2012 ) அந்த ஹோட்டலின் முன்றலில் பி.ப.1 மணி தொடக்கம் பி.ப.5 மணி வரை நடந்த வரவேற்பு விழாவில் பிரித்தானியாவில் இயங்கி வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பின் சார்பில் நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
இவர்கள் கைகளில் இலங்கைத் தேசியக் கொடிகளையும் பிரித்தானியாவின் தேசியக் கொடிகளையும் ஏந்தியவர்களாக ஆதரவைத் தெரிவித்தனர் . இந்த நிகழ்ச்சிகளில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரித்தானியக் கிளையும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
2 comments :
Every action has a opposite and equal reaction.Well done
Very good crowd gathered in front of Hilton Hotel against Tamil Tiger rump. Weldone guys.
Post a Comment