Monday, June 11, 2012

எரிக் சொல்கெய்ம்முக்குப் பரிசு.

ஒஸ்லோவைத் தளமாகக் கொண்ட, 2012 ம் ஆண்டுக்கான தாஹிட்டி பரிசுக்கு எரிக் சொல்கெய்ம் தெரிவு செய்யப்பட்டதற்கு நோர்வேயில் பலத்த அதிருப்தி நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக நாடுகள் பலவற்றில் குறிப்பாக இலங்கையில் அவர் சமாதான நடவடிக்கைகளைக் கையாண்ட விதம் திருப்தியற்றதாகவும், அவரின் முயற்ச்சி தோல்வியில் முடிந்ததனால் நோர்வேயின் பணம் வீணடிகப்பட்டதாக அந்நாட்டு மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும், அவர் வகித்த அமைச்சுப் பதவிகளில் திருப்தியாகச் செயல்ப்படாததால் அவற்றிலிருந்தும் அவர் விலக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவருக்கு நியூயோர்க் நகரில் கிடைக்க விருந்த உயர் பதவி யொன்றும் கைநழுவிச் சென்றுள்ளது. எனினும், ஜூன் 28 ல் நடக்கவிருக்கும் இந்த பரிசளிப்பு விழா விழுந்து போன சோல்கெய்மின் மார்க்கட்டை சற்று உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1 comments :

Anonymous ,  June 11, 2012 at 3:57 PM  

A winner or achiever has the rights and eligiblity to obtain a prize,but how a person who had flown up and down for nothing is entitled for a prize.He had only his joyful time on the other side of the capital of Srilanka.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com