பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் பகுதியில் ஐயாயிரம் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வீதி பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்திற் கொண்டு இந்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.
இதேவேளை, அநுராதபுரம் பகுதியிலுள்ள வாவிகளில் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரம் நீராடுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்த பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவித்தல் பலகைகளின் பிரகாரம் செயற்படுமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment