Wednesday, June 20, 2012

நவநீதம்பிள்ளைக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

சுதந்திர இலங்கையில் இடம்பெற்று வரும் பாரிய அபிவிருத்திகளை நேரில் காணுவதற்காக, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளைக்கு அரசாங்கம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு விஜயம் செய்து நாடு பெற்றுள்ள அபிவிருத்திகளை அவதானிக்க வேண்டுமென அரசாங்கம் கடந்த வருட ஏப்ரல் மாதம் அழைப்பினை விடுத்தது.

ஐ.நா மனித உரிமை பேரவையின் 20 வது அமர்வை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையிலேயே வெளிவிவகார அமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கை பெற்றுள்ள அபிவிருத்திகள் தொடர்பாக மனித உரிமை பேரவைக்கு அறிவுறுத்து வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்படடுள்ளதுடன்,வடகிழக்கின் மீள்குடியேற்ற பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதுடன் மிகச்சிறிய நிலப்பரபிலேயே கண்ணி வெடிகள் அகற்றப்படவுள்ளதாகவும் சிறுவர் போராளிகளில் அநேகமானோர் புனர்வாழ்வளிக் கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் வடகிழக்கில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், வடமாகாண தேர்தலை துரிதமாக நடத்துவது தொடர்பாகவும், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment