ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட இலங்கை தூதுக் குழுவினர் அதன் மூன்றாவது நாள் நிகழ்வில் எமது நாட்டின் வடபகுதியில் தற்போது இராணுவத்தின் பலம் குறைக்கப்பட்டிருக்கிறதென்றும் இன்று வடபகுதியில் 20 ஆயிரம் இராணுவ வீரர்களே இருக்கிறார்கள் என்றும் நாட்டின் தேசியப் பாதுகாப்பை கருத்திற் கொண்டே இப்போது குறைந்தளவில் இராணுவ வீரர்கள் அங்கு வைக்கப்பட்டிருப்பதாக இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபைக்கான பதில் தூதுவர் திருமதி மனிஷா குணசேகர அறிவித்திருக்கிறார்.
பேரவை கூட்டத் தொடரில் உரையாற்றிய திருமதி மனிஷா குணசேகர, இன்று நாட்டின் வட பகுதியில் உள்ள இராணுவ வீரர்க ளின் எண்ணிக்கை யுத்தம் முடிவ டைந்ததை அடுத்து படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக கூறினார்.
தற்போது இராணுவத்தினர் பாதுகா ப்பு தொடர்புடைய பணிகளில் மாத்திரம் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் இதனால் யுத்தத்திற்கு பின்னர் வடபகுதியில் உயர் பாதுகாப்பு வல யங்கள் 40 சதவீதம் குறைந்திருப்ப தாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜெனீவா மனித உரிமை பேரவையின் 19 வது கூட்டத் தொடரில் அமெரிக் காவின் அனுசரணையுடனான இலங்கையை கண்டிக்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது செய்யத்தகாத செயல் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருந்து வருகிறதென்றும் அவர் சொன்னார்.
இந்த பிரேரணை அநாவசியமான பிரேரணை என்றும் இது எங்கள் நாட்டின் உள்ளூர் செயற்பாடுகளை வலுவூட்டுவதற்கு எவ்வகையிலும் உதவப் போவதில்லை என்றும் இலங்கை தூதுக்குழுவினர் அங்கு சுட்டிக் காட்டினார்கள். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனால் இலங்கை மக்கள் சர்வதேச செயற்பாடுகள் மீது நம்பிக்கை இழக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய இலங்கையின் பதில் தூதுவர் மனிஷா குணசேகர, மக்களின் இந்த உணர்வுகளை புரிந்து கொண்டுள்ள நாம் நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட தீர்வை நடைமுறைப்படுத்த விரும்புவதாகவும் கூறினார்.
வெளிநாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் இவ்விதம் தலையிடுவது அந்நாடுகளுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் புரிந்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்த திருமதி குணசேகர, சர்வதேச சமூகம் நெறியான, நிலையான கொள்கைகளை கடைப்பிடித்து பாகுபாடுகளை இல்லாமல் செய்வது அவசியம் என்றும் கூறினார். இலங்கை தூதுக்குழுவினர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தங்கள் நாட்டை எதிர்நோக்கியுள்ள பாரிய சவால்களை வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கு உதவி செய்ய வேண்டுமென்ற வேண்டுகோளையும் விடுத்தனர்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம, அங்கு உரையாற்றுகையில் இலங்கை அரசாங்கம் கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் சிபாரிசுகளை நிறைவேற்றுவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளதாக கூறினார். இந்தப் பணியை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் ஒரு ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். இவற்றில் சில யோசனைகள் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக நிறைவேற்றப்படும் என்றும் அவர் சொன்னார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை உடனடியாக நிறைவேற்றுவதற்காக தற்போது இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 1133 தமிழர்கள் பணிபுரிகிறார்கள் என்றும் இவர்களில் 436 பேர் தற்போது வடபகுதிக்கும் 377 பேர் கிழக்கு மாகாணத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
No comments:
Post a Comment