பிரித்தானியாவிலிருந்து மஹிந்தர் வெற்றியுடன் சென்றாரா வெட்கப்பட்டு சென்றாரா?
எலிசபத் மகாராணியின் வைர விழாவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கவிற்கு விடுக்கப்பட்ட விசேட அழைப்பை ஏற்று அவர் அந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தார். அவரது பிரித்தானிய விஜயத்தை அறிந்த புலி ஆதரவாளர்கள் பெருமெடுப்பிலான ஆர்பாட்டங்களுக்குஅழைப்பு விடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சுமார் 20 ஆயிரம் மக்களை சேர்த்துக்கொள்வதே நோக்கமாக இருந்தது. இதற்காக புலிகளின் முழு பிரச்சாரப்பலமும் பிரயோகிக்கப்பட்டது. சுமார் ஆயிரக்கணக்கான இணையத்தளங்களுடாகவும் நுற்றுக்கணக்கான வானொலி மற்றும் தொலைக்காட்சிகளினூடாக இப்பிரச்சாரம் இடம்பெற்றது.
ஆனால் இத்தனை பிரச்சாரங்களும் தமிழ் மக்களின் காதுகளில் அவலஓலமாக ஒலிந்திருந்தாலும் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை என்பதும் அவர்கள் மேற்படி அழைப்பின் நோக்கங்களை நன்கு உணர்ந்துள்ளார்கள் என்பதும் கீழே காணப்படம் படம் காட்டி நிற்கின்றது.
ஜனாதிபதி தங்கியிருந்த கில்டன் ஹோட்டலுக்கு அருகே ஏற்பாடாகியிருந்த ஆர்ப்பாட்டத்திற்காக புலிகளால் தயார் செய்யப்பட்டிருந்த அட்டைப்படங்களையும்: பனர்களையும் தாங்கி நிற்பதற்குக்கூட ஆட்கள் இல்லாது அவை நிலத்தில் குத்தி வைக்கப்பட்டுள்ளதை காணும்போது, புலிகள் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளார்கள் என்பது புலனாகின்றது.
புலிகளியக்கம் பிரித்தானியாவில் பயங்கரவாத இயக்கம் என தடைசெய்யப்பட்டுள்ளது. மறுபுறத்தில் அவ்வியக்கம் மக்களால் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தினை மேற்படி நிகழ்வில் பங்கெடுத்தோரின் எண்ணிக்கை உணர்த்தி நிற்கின்றது. 300000 மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் பிரித்தானியாவிலிருந்து சுமார் ஆயிரம் மக்களைகூட திரட்ட முடியாத புலிகள் ஐரோப்பாவின் சுவிட்சர்லாந்து பிராண்ஸ் ஜேர்மனி போன்ற நாடுகளிலிருந்து 13 பஸ் வண்டிகளில் ஆட்களை கொண்டுவந்து இறக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
மேற்படி ஆர்ப்பாட்டத்தில் புலிகளின் கொடியினை ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை பிரித்தானியாவின் இரட்டை வேடத்தை கோடிட்டுக்காட்டுகின்றது. மேலும் குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்திற்காக பிரச்சாரங்கள் மேற்கொண்டோர் பகிரங்கமாகவே ஆர்ப்பாட்டத்தில் 20000 மக்களை பிரித்தானியாவின் மெட்ரோபொலிற்றன் பொலிசார் எதிர்பார்கின்றனர் எனவும் அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்ற தொனியிலும் லட்சக்கணக்கானோருக்கு மின்னஞ்சல் அனுப்பிவைத்துள்ளனர்.
அதற்கான சான்று இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள இயக்கமான, தனது நாட்டில் பயங்கரவாத இயக்கம் என முத்திரை குத்தப்பட்டு தடைசெய்யப்பட்டுள்ள இயக்கத்திற்கு பிரித்தானியா தற்போது ஒட்சிசன் வழங்குகின்றது. அதன் பொருட்டே பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு ஒன்றுக்கு அதிதி ஒருவரை அழைத்து அவருக்கு எதிராக தன்னால் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டுள்ளோரை தூண்டிவிட்டுள்ளதுடன் மக்களால் நிராகரிப்புக்கு உள்ளாகியுள்ளதும் மக்கள் மத்தியில் செல்வாக்கு மங்கிச் செல்வதுமான இயக்கத்தின் கொடியினை தனது சட்ட திட்டங்களுக்கு விதிவிலக்கு கொடுத்து அல்லது சட்டதிட்டங்களை குப்பையில் போட்டுவிட்டு அவ்வியக்கத்தின் கொடியினை தூக்கி பிடிக்க அனுமதி வழங்கியதன் மூலம் அவ்வியக்கத்தை மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் திணிக்க முற்படுகின்றது எனக் கொள்ளலாம்.
ஆனால் பிரித்தானியா எத்தகைய விதிவிலக்குகளை வழங்கி தனது நாட்டின் சட்டதிட்டங்களை மீறி மீண்டும் புலிகளை உயிர்பெறவைக்க முனைந்தாலும் அது வெற்றி பெறாது என்பதனை மக்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.
நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போர்க்குற்றவாளி எனவும் அவர் கலந்து கொள்வதை நிராகரிக்க மக்கள் பிரித்தானிய அரசைக்கோர வேண்டுமெனவும் புலி ஆதரவளர்களால் மக்கள் முன் ஒண்லைன் பெட்சிசன் கொண்டு செல்லப்பட்டது. குறிப்பிட்ட பெட்டிசன் உலகம்பூராகவும் வாழுகின்ற தமிழ் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அதில் 4040 பேரே கையொப்பம் இட்டனர். எனவே இதனூடாக தமிழ் மக்கள் பிரித்தானிய அரசிற்கு சொல்லியிருக்கும் செய்தி என்ன? ஆதாவது பெட்டிசனில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மஹிந்தவை தமிழ் மக்கள் போர்க்குற்றவாளி எனக் கருதவில்லை என்ற செய்தியேயாகும். எனவே பிரித்தானிய அரசியல்வாதிகள் இலங்கை அரசை எதிர்த்தால் தமிழ் மக்களின் வாக்குகளை பெற முடியும் எனக் கருதுவார்களாயின் அது தப்புக்கணக்காகும்.
முடிவுற்றுள்ள பெட்டிசனின் முற்றிலுமாக எத்தனை பேர் கையொப்பமிட்டுள்ளனர் என்பதை இங்கு காணலாம்.
இறுதியாக தலையங்கத்திற்கு வருவோம். பிரித்தானியா வந்த ஜனாதிபதி வெற்றியுடன் சென்றாரா வெட்கப்பட்டு சென்றாரா? பிரித்தானியா மஹிந்தவை வருந்தியழைத்து தனது நாட்டிலே பயங்கரவாதிகளை தூண்டி விட்டு கூச்சலிட்டதில் அவமானம் யாருக்கு? ஒரு விருந்தாளியை அவமானப்படுத்தியதில் பிரித்தானியாவின் உபசரிப்பின் உயர் தரம் தெளிவாகியுள்ளது.
எது எவ்வாறாயினும் மஹிந்தர் இன்று தமிழ் மக்கள் தனக்கு எதிராக இல்லை என்ற விடயத்தை உலக நாடுகளுக்கு உரக்கச்சொன்னவராக நாடு திரும்பியுள்ளார். அதாவது ஐரோப்பா முழுவதுமாக பரந்துள்ள சுமார் 1500 புலிகளே மஹிந்தருக்கு எதிராக செயற்படுகின்றனரே தவிர தமிழ்மக்கள் எதிராக இல்லை என்ற செய்தியை பிரித்தானியாவிற்கும் உலகிற்கும் சொல்லிச் சென்றுள்ளார்.
மேலும் புலிகள் அவருக்கு எதிராக பிரித்தானியாவில் திரண்ட செய்தி சிங்கள பௌத்தர்கள் மத்தியில் அவர் பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம் என்ற விடயத்தையும் எடுத்தியம்பி அடுத்த தேர்தலின் வாக்குச்சரிவை நிவர்த்தி செய்துள்ளது
1 comments :
Bogus fabricated exaggerated propagandas against the president just hysterically funny and nonsense
Post a Comment