நல்லவை செய், அல்லவை தவிர் கூறுகிறார் மேர்வின்
நல்லவை செய், அல்லவை தவிர் என்று ஜனாதிபதி எனக்கு எப்போதும் அறிவுரை கூறி வருகின்றார். அதற்கமைய மனத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எல்லோருக்கும் நல்லதையே செய்ய முனைந்துள்ளேன் என்று களனி விகாரையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பொது மக்கள் உறவு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
சொத்து சுகம், காணிகள், வீடுவாசல்கள் எல்லாம் ஆசையை வளர்ப்பன. அவற்றை விடுத்து மனதைக் கட்டுப்படுத்தி வாழ முடியும். கூடிய மட்டும் அவ்வாறு வாழ முயற்சிக்கின்றேன் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment