Friday, June 8, 2012

வன்னி மக்களை விடுவிக்க புலிகளைத் தூண்ட மறுத்த புலம்பெயர்மக்கள். விக்கிலீக்ஸ்

வன்னியில் யுத்தம் இறுதி கட்டத்தை அடைந்திருந்தபோது அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்த இலங்கையில் வெளிவிவகாகர அமைச்சர் புலம்பெயர் வன்னி மக்களை விடுவிப்பதற்கு விடுதலைப் புலிகளைத் தூண்ட வேண்டும் எனக்கேட்டுள்ளார். இதற்கமைய அமெரிக்க உதவிச் செயலாளர் பௌச்சர் அமெரிக்கா வாழ் புகலிடமக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது, குடிமக்களை விடுவிக்க புலிகளைத் தூண்டுமாறு தாம் கேட்டுக் கொண்டதை அவர்கள் நிராகரித்து விட்டார்கள் என்று வாசிங்டனிலிருந்து கொழும்பில் உள்ள அமெரிக்க அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது 2009 ஏப்ரல் 17ம் திகதி இலங்கையின் அமெரிக்க தூதுவர் 'இரகசியம்' என்று குறிப்பிட்டு அனுப்பிய கேபில் செய்தி விக்கலீக்ஸுக்குக் கசிந்துள்ளது. இந்த செய்தியில், ஐ.நா. அதிகாரி விஜய் நம்பியாரின் இலங்கை வருகை, பொதுமக்களை போர் நடைபெறும் இடங்களிலிருந்து வெளியேற்றல் போன்றவை பற்றி வெளிநாட்டமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளரிடம் நடாத்திய கலந்துரையாடல்களின் பெறுபேறுகள் பற்றி பிளேக் குறிப்பிட்டுள்ளார். உயர்தரத்திலான ராஜதந்திர வாய்ப்புகளுக்கு இடமளிக்காது போரைத் தொடர்வதில் முனைப்புக் காட்டினால், பன்னாட்டுச் சமூகத்தின் மத்தியில் இலங்கை அடையப் போகும் துர்நிலையைப் பற்றி வெளிநாட்டமைச்சரை எச்சரித்து பற்றியும் அதில் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தெற்குச் சிங்கள மக்களைக் குஷிப்படுத்தவும் அப்போது நடைபெறவிருந்த மேற்கு மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டும் ஜனாதிபதி ராஜபக்ஷ கடுமையான போக்கை கடைப்பிடித்தாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் பிறரின் உணர்வுகளுக்கு இலங்கை மதிப்பளிக்கின்றது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment