ஹெட்டியாவல - புஹல்வெல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பல குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீடொன்றில் கொள்ளையடிக்கச் சென்ற சந்தர்ப்பத்திலேயே குறித்த வீட்டு உரிமையாளரின் துப்பாக்கி சூட்டிற்க்கு இலக்காகி இந்நபர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment