ஜீஎல் பீரிஸின் அமெரிக்க விஜயம் தொடர்பில் ஜேவிபி எழுப்பிய கேள்விக்கு விளக்கம்
கடந்த மார்ச் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் மனித உரிமைகள் மாநாட்டில் இடம்பெற்ற யோசனைகளை ஏற்றுக் கொண்டதன் பின்னரே அமைச்சர் ஜீஎல் பிரிஸ் குழுவினர் அமெரிக்க சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதென ஜேவிபி யின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்
மேற்படி கூற்றை அமைச்சர் வன்மையாக நிராகரித்துள்ள சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா கடந்த ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் வொஷிங்டன் விஜயம் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினரின் கருத்துகளுக்கு பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் சார்பில் நேற்று பாராளுமன்றத்தில் அமைச்சர் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முழுமையான பிளவு உருவானது. அது இலங்கைக்கு பெரிதும் நன்மையாகவே அமைந்ததென அமைச்சர் கூறினார்.
மனித உரிமைகள் அமர்வின்போது இலங்கை மக்களின் சுய கௌரவத்தை பாதுகாக்கக்கூடிய ஒரேயொரு வாக்குடனான வெற்றியே கிடைத்தது. அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்களின் வொஷிங்டன் விஜயம் அந்நாட்டின் அழைப்பை விட ஆணையின் பேரிலேயே இடம்பெற்றதென அனுர குமார திஸாநாயக்க தெரிவித்த கருத்தையும் அமைச்சர் வன்மையாக மறுத்தார். இந்தப் பயணம் அழைப்பின் பேரிலேயே அமைந்ததென ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க செயலாளரின் அழைப்புக் கடிதத்தையும் அமைச்சர் அங்கு முன்வைத்தார்.
வொஷிங்டன் பயணத்தின் போது அமைச்சர் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் அரசாங்கத்தின் ஏற்பாடுகள் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளதையும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பாராளுமன்ற விசேட குழு மூலமும் மேலும் சில பரிந்துரைகளை குறித்த நிறுவனங்கள் மூலமும் செயல்படுத்துவதாக அமைச்சர் இங்கு கூறினார்.
குறுகிய, மத்திய, நீண்டகால அடிப்படைகளில் இந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும். பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அமெரிக்க இராஜாங்க செயலாளருடனான சந்திப்பின்போது முன்னாள் மோதல்களுடன் சம்பந்தப்பட்ட நபர்களை மீண்டும் சமூகத்துடன் ஒன்றிணைக்கும் செயற்பாடுகள், உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளானவர்களை மீள குடியமர்த்தல், அதி பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், போன்ற செயற்பாடுகள் தொடர்பாக அவர்களை தெளிவுபடுத்தியுள்ளார்.
இதைத்தவிர நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் அவசரகால சட்ட முறைமையை நீக்குதல் காணி உரிமையை மீண்டும் வழங்குவது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார். வடமாகாணசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தெரிவுக்குழு உட்பட அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாகவும் அங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ள கருத்துக்களில் எதுவித உண்மையும் இல்லையென சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அங்கு சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment