Tuesday, June 5, 2012

போர்காரணமாக இடம்பெயர்ந்தோர் தமது காணிகளுக்கு உரிமை கோரலாம். சட்ட திருத்தம்.

யுத்தம் காரணமாக நாட்டை விட்டோடியவர்கள் தமது காணிகளை மீளப் பெறுவதற்கு ஏதுவாக தற்போதைய ஆட்சியுரிமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படவிருக்கின்றது என்று நீதியமைச்சர் ரவூக் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.

இன்றைய ஆட்சியுரிமைச் சட்டத்தின்படி 10 ஆண்டுகள் தொடராக உடைமை கொள்ளல் மூலம் ஒருவரின் காணிக்கு எதிருரித்து கோரலாம். ஆனால், யுத்தம் காரணமாக கடந்த மூன்று தசாப்தங்களாக தமது காணிக்கு வெளியே வசிப்போரின் காணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்படவிருக்கின்றது.

1983மே 1 மற்றும் 2012 திசம்பர் 31 க்கு இடைப்பட்ட காலத்தில் தமது காணியை விட்டு இடம் பெயர்ந்தோர் இந்த உரிமைமையைப் பெறுவர் என்று நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment