பம்பலப்பிட்டி சடலம் - கௌசல்யனின் மெய்ப்பாதுகாவலர்?
இரண்டு தினங்களுக்கு முன்னர் பம்பலப்பிட்டியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் புலிகளின் அரசியல்துறையைச் சேர்ந்த பொறுப்பாளர் கௌசல்யனின் மெய்ப்பாதுகாவலர் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு அருகில் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கிழக்கு மாகாணம் கல்லாற்றைச் சேர்ந்த க.உதயகாந்தன், விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யனின் மெய்ப்பாதுகாவலராகக் கடமையாற்றியவரென அடையாளங் காணப்பட்டுள்ளார்.
இறந்தவரின் தந்தையார் இவரை அடையாளங் காட்டியுள்ளார். 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவர் பிரிட்டனுக்குச் சென்று அங்கு குடும்பத்துடன் வாழ்ந்தவரெனவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை திரும்பிய இவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது.
இவரின் கொலை தனிப்பட்ட காரணத்துக்காகவா அல்லது அரசியல் காரணங்களுக்காகவா நடைபெற்றதெனத் தெரியாதுள்ளது
0 comments :
Post a Comment