கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று சில மணிநேரம் பயணிகள் உள்வர-வெளிச்செல்ல தடை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி வலையமைப்பு நேற்று பிற்பகல் திடீரெனச் செயலிழந்ததால் பயணிகள் எவரும் உள்வரவோ வெளிச்செல்லவோ அனுமதிக்கப்படவில்லை என கட்டுநாயக்க விமான நிலைய கடமை நேர அலுவலகத் தகவல்கள் தெரிவித்தனர்.
கணனி வலையமைப்பு செயலிழந்ததால், பயணிகளின் கடவுச்சீட்டுகளை பரிசோதித்து அனுமதி வழங்க முடியாத நிலை குடிவரவு அதிகாரிகளுக்கு ஏற்பட்டதுடன் இந்த நிலையில் ஒரு சில மணிநேரத்தில் நிலை சீர்செய்யப்பட்டது.
எனினும் பயணிகள் எவரும் விமானங்களை தவறவிடும் நிலையைத் தவிர்த்து ஒரு சில மணி நேரத்தில் அதிகாரிகள் நிலையை சரிசெய்துள்ளளனர்.
0 comments :
Post a Comment