வட மாகாண அரச அதிகாரிகளுக்கான செயற்பட்டறை யாழில்
பாராளுமன்ற விவகார அமைச்சர் சுமேதா ஜீ. ஜயசேனவின் பணிப்புரைக்கமைய வட மாகாண அரச அதிகாரிகளுக்கான செயற்பட்டறை யொன்று, பாராளுமன்ற விவகார அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
வட மாகாண மாவட்ட செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதி செயலாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியேக ஊழியர்களுக்கான இரண்டு நாள் செயற்பட்டறையொன்று, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் பாராளுமன்ற சட்டங்கள், அரச நிதி முகாமைத்துவம், பாராளுமன்ற ஆலோசனை செயற்குழு, கோப் குழு, பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட முகாமைத்துவம் தொடர்பாகவும், அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற விவகார அமைச்சர் சுமேதா ஜீ. ஜயசேன, சிரேஷ்ட அமைச்சர் டியூ. குணசேகர, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் முருகேசு சந்திரகுமார் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இன்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment