சாரதியை கொலை செய்து கொள்ளையிட்ட வேனும் கொலையாளிகளும் கைது
மிரிஹானையிலிருந்து அவிசாவளை செல்வதாக கூறி, வேன் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி கித்துல்கல பகுதி தோட்டமொன்றில வைத்து வாகன சாரதியை படுகொலை செய்துவிட்டு, வாடகைக்கு அமர்த்திய வேனை கொலையாளிகள் கொள்ளையிட்டு சென்றிருந்தனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக விசாரகைளை மேற்கொண்ட கித்துல்கல பொலிஸார், கொலை சந்தே நபர்கள் மூவரை கைது செய்துள்ளதுடன், வாடகைக்கு அமர்த்தி கொள்ளையிட்ட வேனையும் ஒகிரிஉல்லவில் வைத்து கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹட்டன், கண்டி, கிரிஉல்ல, திவுல்தெனிய ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களென தெரிவித்த பொலிஸார் சந்தேக நபர்கள் றுவன்வெல்ல நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதன் பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதா பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment