Friday, June 8, 2012

இலங்கையில் 90 நிமிடத்துக்கொரு பாலியல் வல்லுறவு

நாளாந்தம் ஐந்து பெண்கள் பாலியல் வல்லுறவுக்குக்கு உட்படுகின்றார்கள். ஆனால், உண்மையில் சரியான தொகை அதைவிட மூன்று மடங்கான 15 ஆகும். எனவே, 90 நிமிடங்களுக்கு ஒருமுறை இலங்கையில் ஒரு பாலியல் வல்லுறவு இடம் பெறுகின்றது என்று சோசலிச மகளிர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் சமன்மலி குணசிங்க கூறினார்.

கடந்த 5ம் திகதி பத்தரமுல்லை ம.வி.மு தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்தமுகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேறசொன்னவாறு குறிப்பிட்டார்.

அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்,

மனிதஉறவுகளைச் சீரழிக்கும் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், பெண்களும் பிள்ளைகளும் சமூகக் குற்றங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டுகின்றனர்.

திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப் படுத்தப்பட்ட பின்னர், யாவுமே பணத்தை நோக்கியதாகவே காணப்படுகின்றது.பெண்கள், சிறுவர்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப் படுகின்றார்கள், கொலை செய்யப்படுகின்றார்கள், அடிமைகளாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றார்கள்.விற்கப்படுகின்றார்கள்.

அரசியல் தலையீடு மற்றும் பொலிசாரின் கையாளாகாத தன்மை என்பன இவ்வாறான குற்றச் செயல்களை எல்லை மீறிச் செல்ல வைத்துள்ளன.

1990 ல் ஆண்டுக்கு 665 ஆக இருந்த பாலியில் வல்லுறவு 2011 ல் நவம்பர் 30 வரையில் 1636 ஆக உயர்ந்துள்ளது. பதிவு செய்யப்படும் குற்றங்களில் 48% பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு ஆகும். 89% 16 வயதுக்குட்பட்ட சிறுமியர் ஆவர்.

போதைப் பொருளுக்கும் பணத்துக்கும் எதையும் செய்யத் துணிந்து விட்டனர். நீதி மன்றங்களில் விசாரிக்கப்பட்டு வரும் 15000 இத்தகைய வழக்குகளில் 4000 சிறுவர் சம்பந்தப்பட்டவையாகும்.

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெண்களில் 90% மானோர் பாலியல் இம்சைக்கு உள்ளாகிறார்கள். பெண்கள் மற்றும் சமூக அமைப்புகள் கடைசி வரை காத்திருக்காது ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும்.இதற்கான வழிகாட்டலை வழங்க சோசலிச பெண்கள் ஒன்றியம் தயாராக இருக்கின்றது என்று குணசிங்க கூறினார்.

1 comments :

Anonymous ,  June 8, 2012 at 7:10 AM  

Rule of law and police blindness truly frightening.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com