Tuesday, June 12, 2012

90 ஆயிரம் மனைப்பிரிவுகளுக்கு 9 இலட்சம் கோழிக்குஞ்சுகள்

திவிநெகும தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 90 ஆயிரம் மனைப் பிரிவுகளுக்கு ஒன்பது லட்சம் கோழிக்குஞ்சுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு பத்து கோழிக்குஞ்சுகள் கிடைக்கும்.

முதற்கட்டமாக 60 ஆயிரம் குடும்பங்களுக்கு ஆறு லட்சம் கோழிக்குஞ்சுகள் வழங்கப்படவுள்ளன.

திவிநெகும தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஆயிரம் மாட்டுத் தொழுவங்களை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று திட்டப் பணிப்பாளர் ஹேரத் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். கூடுதலான பாலை பெறுவது இதன் நோக்கமாகும்.

No comments:

Post a Comment