பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட விபசார விடுதிமுகாமையாளர் இருவருக்கு நீர்கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்ரா யு ஜயசூரிய தலா 50 ஆயிரம் ரூபா அபராதமும் பத்து வருட காலம் ஒத்தி வைக்கப்பட்ட ஆறு மாத கால சிறைதண்டனை விதித்தார்.
அத்துடன் கைது செய்யப்பட்ட பெண்கள் ஒன்பது பேரும் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டதை அடுத்து நீதவான் அவர்களுக்கு தலா நூறு ரூபா (100 ரூபா) அபராதமாக விதித்தார்.
நீர்கொழும்பு ஏத்துக்கால பிரதேசத்தில் உள்ள விடுதிகள் இரண்டில் நீர்கொழும்பு பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட போது விபசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 பெண்களையும் அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு ஆண்களையும் பொலிஸார் கைது செய்து இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
இதன் போதே நீதவான் மேற்படி தண்டனை விதித்தார்.
ஒரு விடுதியில் 4 பெண்களும் ஒரு ஆணும் மற்றொரு விடுதியில் 5 பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள இரண்டு ஆண்களும் அந்த விபசார நிலையங்களின் முகாமையாளர்களாவர்.
No comments:
Post a Comment