அமெரிக்கத் தாக்குதலில் பாகிஸ்தானில் 8 பேர் பலி.
பாகிஸ்தானின் வரமேற்கு பழங்குடியினர் பகுதியில் ஆப்கான் எல்லையருகே ஆளில்லா அமெரிக்க விமானம் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாகினர். தெற்கு வாஜிரிஸ்தானில் உள்ள புர்மால் பகுதியில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. வளாகம் ஒன்றின் மீது 4 ஏவுகணைகள் வீசப்பட்டது, இந்த வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் அந்த வளாகம் முழுதும் தீப்பற்றி எரிந்து சாம்பலானது. அங்கிருந்தவர்கள் 8 உடல்களை வளாகத்திலிருந்து மீட்டனர்.
இதே மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment