வவுனியா சிறையில் மன்னார் , வவுனியா காடையர்கள் மோதல். 7 பேர் வைத்தியசாலையில் .
வவுனியா சிறைச்சாலையில் இன்று காலை இடம்பெற்ற மோதலில் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
பல்வேறுபட்ட குற்றச் செயல்களுக்காக வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மன்னார் மற்றும் வவுனியா குழுக்களிடையே இம்மோதல் இடம்பெற்றுள்ளது. இருதரப்பு குழுக்களிலும் முன்னாள் புலி உறுப்பினர்களும் அடங்குவதாக வவுனியா பொலிஸார் தெரிவிகின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொலிஸார் விசேட பாதுகாப்பு வழங்கியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
காயமடைந்துள்ள அனைவரும் மன்னார் தரப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment