அமெரிக்காவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 79 சிறுமிகள் மீட்பு
அமெரிக்காவில் விபசாரத்தில் ஈடுபட்ட 79 சிறுமிகளை பொலிஸார் மீட்டுள்ள தாகவும், இது தொடர்பாக 04 தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவி க்கப்படுகின்றது. அமெரிக்காவில்,13 வயது முதல் 17 வயது வரையுள்ள பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் இந்த வயதுள்ள, ஒரு லட்சம் பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவதாக சி.என்.என். தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதற்கிடையே எப்.பி.ஐ.அதிகாரிகள், பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி, 79 சிறுமிகளை விபசாரத்திலிருந்து மீட்டுள்ளனர். இவர்களை, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தொடர்பாக, 104 தரகர்கள்; கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட ஒரு பெண் குறிப்பிடுகையில் நான் 11 வயது முதல் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தேன் என தெரிவித்தார். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக தெருக்களில் நின்றிருந்த, 2,200 சிறுமிகளை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் இது தொடர்பாக, 1,017 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment