சப்ரகமுவ மாகாணத்தில் 79 தமிழ் மொழி மூல பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்
சப்ரகமுவ மாகாணத்தில் நிலவும் தமிழ் மொழி மூல ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க, மேலும் 79 தமிழ் மொழி மூல பட்டதாரிகளுக்கு, இன்று ஆசிரியர் நியமனங்களை சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், வழங்கிவைத்தார்.
சப்ரகமுவ மாகாணத்தின், தெஹியோவிட்ட, இரத்தினபுரி, நிவித்திகல, பலாங்கொட, எம்பிலிபிட்டிய ஆகிய கல்வி வலயங்களில் 545 தமிழ் மூல ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இப்பற்றாக்குறையை நீக்குவதற்கு, தமிழ் மொழி மூல பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும், 300 க்கும் குறைவான விண்ணப்பங்களே கிடைத்ததாக, மாகாண கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களுள் 150 பேர், நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டு, தகுதியுள்ள 79 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும். இவ்வாசிரியர் நியமனங்கள் வழங்கப்படும்போது, அவர்களின் கல்வித்தேவை, விண்ணப்பதாரிகளின் தகுதி ஆகியவை தவிர, வேறு எதுவும் கவனத்திற்கொள்ளப்படவில்லையென, மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment