சிறுமி துஷ்பிரயோகம் - இலங்கைத் தேரருக்கு 7 ஆண்டு சிறை
பிரிட்டனில் இளஞ் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த இலங்கைத் தேரருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டன் குரொய்டன் பகுதியிலுள்ள பௌத்த விகாரையின் விகாராதிபதியான இத் தேரர் 1978-79 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் குறிப்பிட்ட சிறுமி மீது பாலியல் குற்றங்களைப் புரிந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
65 வயதான பகலகம சோமரத்ன தேரர் என்ற இந்த விகாராதிபதியை காலவரையறையின்றி பாலியல் குற்றவாளிகளின் பட்டியலில் வைத்திருக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் சிறுவர்கள் தொடர்பான எவ்வித செயற்பாடுகளிலும் இத் தேரர் கலந்துகொள்ளக்கூடாதெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 comments :
Post a Comment