திபெத் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை இரண்டு திபெத்திய பௌத்த துறவிகள், லஹாசாவில் தீக்குளித்தனர். அதைதொடர்ந்து திபெத்தின் சுவான் மாகாணத்தின் அரசமாளிகை முன்னாள், 33 வயதான மற்றுமொரு பெண் துறவி புதன்கிழமை தீக்குளித்ததையடுத்து ,600 திபெத்திய பௌத்த துறவிகள் சீன பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் தீக்குளிப்பதை தடை செய்துள்ள சீனா, அவர்க்ளை குற்றவாளிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிப்பதுடன், திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமவே அவர்களை தூண்டிவிடுவதாக குற்றம் சுமத்தி வருகிறது.
இதுவரையில் திபெத்துக்கு வெளியே நடைபெற்று வந்த இவ்வாறான தீக்குளிப்பு போராட்டங்கள் தற்போது திபெத்தினுள்ளேயும் பரவத்தொடங்கியுள்ளமை சீனாவுக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளது.
No comments:
Post a Comment