நுவரெலியா மார்கஸ் தொட்டவத்தை பகுதியில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டதாகவும், அதில் 50 வயதுடைய ஆண் ஒருவரும் 25 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும், நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment