பொலிஸ் சேவையை அபகீர்த்திக்கு உட்படுத்தும் வகையில், பொலிஸ் அத்தியட்சகர்களாக செயற்பட்ட 5 உப பொலிஸ் அத்தியட்சகர்கள் சேவையி லிருந்து இடைநிறுத்தப் பட்டுள்ளனர். கடமையை துஷ்பிரயோகம், ஒழுக்க மீறல் உட்பட 5 குற்றச்செயல்களின் கீழ், இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தினால், 8 வருட கால திருப்திகரமான சேவை காலத்தை கொண்டுள்ள உப பொலிஸ் அத்தியட்சகர்களை, பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்துமாறு, சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயிருப்பினும், திருப்திகரமான மற்றும் தொடர்ச்சியான சேவை காலத்தை கொண்டிராத ஒரு சில உத்தியோகத்தர்கள், பொலிஸ் அத்தியட்சகர்களாக சேவையாற்றியமை தொடர்பில், எல்பிட்டிய பிரதேசத்திலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தென் பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய, ,இவர்கள் உடனடியாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் உரிய சுற்றறிக்கைக்கு புறம்பாக பதவி ,இலட்சினைகளை அணிந்து, அதன் வரப்பிரசாதங்களை பெற்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, ,இவர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment