5,800 கிலோ கிரேம் எடை கொண்ட கழிவு தேயிலைகளை கைப்பற்றியுள்ளதாக உடுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். லொறியில் ஏற்றுவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த போதே, இவை கைப்பற்றப்பட்டதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக, உடுகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹினிதும, பனங்கல பிரதேசத்திலிருந்து கம்பளைக்கு கொண்டு செல்வதற்காக இவை தயார் படுத்தப்பட்டிருந்ததாகவும், காலி மாவட்டத்தின் பல இடங்களில் கழிவு தேயிலைகளை, பயன்பாட்டுக்கு உகந்த தேயிலையுடன் கலக்கப்பட்டு விற்பனை செய்து வருவதாகவும், விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் நாட்டின் அதிசிறந்த தேயிலைக்கு காணப்படும் கீர்த்திக்கு பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, பொலிஸார் தொடர்ச்சியாக புலனாய்வு விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான ஆயிரக்கணக்கான கிலோ கழிவு தேயிலை சமீபத்தில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment