சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 44 கையடக்க தொலைபேசிகள் மீட்பு
அநுராதபுரம் மற்றும் கொழும்பு சிறைச்சாலைகளில் சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 44 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் உதவி புரிந்துள்ளனர் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அத்துடன், சிறைக்கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டங்கள் மற்றும் ஆர்பாட்டங்கள் ஆகிய வீடியோ காட்சிகள் மீட்கப்பட்ட தொலைபேசியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வெளிநாடுகளிலுள்ள மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment