Tuesday, June 26, 2012

இராணுவத்தின் பொறுப்பிலிருந்த 400 வீடுகளை விரைவில் கையளிக்கவுள்ளதாகத் தெரிவிப்பு

வடக்கில் இராணுவத்தின் பொறுப்பி லிருந்த 400 வீடுகளை விரைவில் கையளிக்கவுள்ளதாக யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கின் பாதுகாப்பு தேவைகளை கருத்திற் கொண்டு 1995 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற வீடுகளில் 50 வீதமான வீடுகள் மீளவழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இராணுவத்தினர் தற்போது தங்கியுள்ள 400 வீடுகளுக்கான மாதாந்த கொடுப்பனவு உரிமையாளர்களுக்கு அரசாங்கம் வழங்கி வருகின்றது என சுட்டிக்காட்டிய கட்டளைத் தளபதி, வடக்கின் பாதுகாப்பு நிலைமை சிறந்ததாக காணப்படுவதனால் 26 ஆயிரம் இராணுவத்தினர் கடமையாற்றி வந்த நிலையில் அது தற்போது 15 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com