Wednesday, June 6, 2012

சனல் 4 இயக்குனர் அவர் மனைவியுடன் நாடுகடத்தப்பட்டார்.

இலங்கைக்கு வருகை தந்த பிரித்தானியாவின் சனல் 4 அலைவரிசையின் பணிப்பாளர்களுள் ஒருவரான ஸ்டூவட் கொஸ்க்ரோவும் அவரது தமிழ் இன மனைவியுமான யு.கே.ரிவி நிறுவனத்தின் ஷிராணி சபாரத்னம் ஆகிய இருவரும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் வெளியேற்றப்பட்டனர்.

பிரித்தானியாவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்த தம்பதியினருக்கு நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இடமளிக்கவில்லை. நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு முன்னர் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் இவர்களை விசாரணைக்குட்படுத்தியதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

திரைப்படம் ஒன்றை தயாரிக்கும் போர்வையில் இதற்கு முன்னரும் இவர்கள் இலங்கைக்கு வருகை தந்து வடபகுதிக்கும் விஜயம் செய்திருந்ததாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. ஷிராணி சபாரத்னம் என்பவர் யாழ் வட்டுக்கோட்டை பகுதியை பிறப்பிடமாக கொண்டவர். இவர் புலம் பெயர் தமிழர்களின் பிரபல உறுப்பினரென பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

2010 ஆம் ஆண்டில் லண்டன் நகரில் இடம்பெற்ற ஈழம் மக்கள் கணீப்பீட்டிலும் இந்த சனல் 4 பணிப்பாளர்களுள் ஒருவரான ஸ்டூவட் கொஸ்க்ரோ கலந்து கொண்டுள்ளார் இதற்கமைய சனல் 4 அலைவரிசைக்கும்  எல்ரிரிஈ அமைப்பிற்கும் இடையில் காணப்படுகின்ற தொடர்புகள் தெளிவாகுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2 comments:

  1. After all a load of tosh sent back. Well done.

    ReplyDelete
  2. Dept of immigration control is doing a proper job.Well done

    ReplyDelete