பயங்கரவாத்தை தோற்கடித்த பின் முதன்முதலாக யாழ். குடாநாட்டில் இராணுவத்தினர் 50ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் றுவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
புலிப்பயங்கரவாதம் முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் யாழ். குடாநாட்டு மக்கள் மிகவும் சந்தேசமாக வாழ்வதாகவும், இதனால் யாழ்.குடாநாட்டில் பாதுகாப்பிற்கென, சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள துருப்பினர்களின் எண்ணிக்கையை, 35 ஆயிரத்தினால் குறைக்க முடிந்துள்ளதாக ராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டில் மனிதாபிமான நடவடிக்கைகள் உச்சகட்டத்தை எட்டிய வேளை, யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு பணிகளில் சுமார் 50 ஆயிரம் ராணுவ துருப்பினர்கள் நிலைநிறுத்தப்பட்டதாகவும், 2009 ஆம் ஆண்டு, புலிப்பயங்கரவாதம் தோல்வியடையச் செய்யப்பட்டதன் பின்னரும், 2010 ஆம் ஆண்டின் ஆரம்ப பகுதியிபும் இவ்வெண்ணிக்கை 26 ஆயிரமாக காணப்பட்டது. எனினும், தற்போது யாழ். குடாநாட்டில் 15 ஆயிரம் ராணுவத்தினர் மாத்திரமே கடமையில் ஈடுபட்டுள்ளனர் என ராணுவ பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment