பாகிஸ்தானில் இன்று தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 34 பேர் பலியானார்கள். பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில் மக்கள் நெருக்கம் மிகுந்த மார்கெட் பகுதியில் இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 34 பேர் பலியாயினர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்புக்கு தலிபான் தீவிரவாதிகள் காரணம் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் குண்டுவெடிப்பு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
No comments:
Post a Comment