Saturday, June 30, 2012

விமான தாக்குதல் நடத்த 2ஆண்டுகளாக பயிற்சி மேற்கொண்டேன் - கைதான தீவிரவாதி

இந்தியாவில் முக்கிய நகரங்களின் மீது விமான தாக்குதல் நடத்த 2 ஆண்டுகளாக பயிற்சி மேற்கொண்டதாக கைதான தீவிரவாதி ஜிண்டால் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

மும்பை தாக்குதலை பாகிஸ்தானில் இருந்தபடியே உத்தரவிட்டு நடத்திய தீவிரவாதி அபு ஜிண்டால் கடந்த வாரம் டெல்லி பொலீஸாரிடம் சிக்கினான். அவனை டெல்லி பொலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவன் மூலம் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளின் சதி திட்டங்கள் வெளிவந்தபடி உள்ளன.

அபு ஜிண்டாலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் விமானத்தை கடத்தி மோதச் செய்து, மிகப்பெரும் நாசவேலைக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக விசாரணை அதிகாரிகளிடம் கைதான நபர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் திட்டத்துக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த தற்கொலை படை தீவிரவாதிகள் விமானம் ஓட்ட பயிற்சி எடுத்து வருவதாகவும், கைதான நபர் தெரிவித்துள்ளார்

இதற்கான தலைமையகம் முசாபராயித் நகரில் அமைந்துள்ளதாகவும், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் எங்கெங்கு பயிற்சி முகாம்கள் அமைந்துள்ளனர்? எத்தகைய பயிற்சிகளை பெற்று வருகிறார்கள்? இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்? என்பன போன்ற தகவல்களை அபு ஜிண்டால் தெரிவித்துள்ளதனால், டெல்லி பொலீஸாருக்கும், விசாரணை குழுவினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

ஜிண்டால் கூறிய தகவல்களின் பேரில் சில இடங்களில் ராணுவத்தினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment