கட்டுவன இரட்டைக்கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் விளக்கமறியலில்
கட்டுவன இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண, நேற்று சரணடைந்த குறித்த சந்தேக நபரை விசாரணைகளை நடாத்த, விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தது. பின்னர் நீதிமன்றம், அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த சந்தேக நபரிடமிருந்து நாங்கள் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளவுள்ளோம்.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைக்கு அனுப்பப்பட்டனர். மிக திறமையான அதிகாரிகளையே, நாம் அங்கு அனுப்பினோம். 'பி' அறிக்கையின்படி, இந்த சந்தேக நபரை நாம் தடுப்பு காவலில் வைத்திருந்தோம். மேலும் பல சந்தேக நபர்கள் இருப்பதாக சாட்சியங்கள் மூலம அறியக்கிடைத்துள்ளது. இது குறித்தும், நாம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம், என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
0 comments :
Post a Comment