சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த 250 வெளிநாட்டவர்கள் கடந்த ஐந்து மாதங்களில் நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
விஸா காலாவதியாகியும் இலங்கையில் தங்கியிருந்த 137 இந்தியர்கள், 38 பாகிஸ்தானியர்கள், 17 தாய்லாந்து பிரஜைகளே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள விசாரணை பிரிவு அதிகாரி அமித பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவர்களில் விஸா காலாவதியானவர்களும் விஸாவை பயன்படுத்தி அநாவசிய செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment