25 இலட்சம் ரூபா போதைப் பொருளுடன் நைஜீரிய நாட்டவர்கள் மூவரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சந்தன கலப்பதி இன்று தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் நீர்கொழும்பு - கட்டுவ வீதி , ஏத்துக்கால பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீசா இன்றி நாட்டில் தங்யிருப்போரை கண்டு பிடிப்பதற்காக ஏத்துக்காகல உல்லாசப் பயணத்துறை பொலிஸார் நேற்று மாலை திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட போது இவர்கள் கைது செய்யபபட்டுள்ளனர்.இவர்களில் இருவர் தம்பதியினராவார்.
இந்த வெளிநாட்டவர்கள் சர்வதேச போதைப் பொருள் வர்த்தகத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் எனவும் விசா காலம் முடிவடைந்த பிறகு நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 300 கிராம் ஹெரோயினும் 44 கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து தபால் மூலமாக இந்த போதைப் பொருள் இலங்கைக்கு கடத்திவரப்பட்டுள்ளன என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
படத்தில் நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி சந்தன கலப்பத்தி; , உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஓ.டப்ளியு. சில்வா , நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவ, ஏத்துக்காகல உல்லாசப் பயணத்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அத்துல கமகே, பொலிஸ் பரிசோதகர் டி.எஸ் பி.பெர்னாண்டோ , பொலிஸ் கான்ஸ்டபிள்களான திசாநாயக்க, ஜீ. ஹசீம் , சஞ்சீவ திசாநாயக்க ஆகியோர் காணப்படுகின்றனர்.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment