Wednesday, June 27, 2012

மன்னாரின் சகல பகுதிகளுக்கும் 24 மணிநேரமும் சுத்தமான குடிநீரை வழங்க ஏற்பாடு

மன்னார் பகுதிக்கு 24 மணிநேரமும் சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான புதிய குழாய்களை பொருத்தும் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருவதாக மன்னார் மாவட்ட தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் தெரிவித்துள்ளார்.

முருங்கன்-வங்காளை, திருக்கேதீஸ்வரம், மன்னார் போன்ற பகுதிகளில் புதிய குழாய்கள் பொருத்தப்பட்டு வருவதாகவும், சுமார் 24 கிலோ மீட்டர் தூரத்தை கொண்ட குழாய்கள் பொருத்தும் பணிகள் இடம்பெற்றுவருவதுடன், குழாய்கள் மூலமாக இப்பகுதிக்கு 24 மணிநேரமும், குடிநீரை வழங்குவதற்கு ஏற்ற வகையில், முருங்கனிலிருந்து குறித்த இடத்திற்கு குழாய்கள் பொருத்தப்பட்டு வருவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

3 ஆயிரத்து 200 மில்லியன் ரூபா இதற்கென செலவிடப்படுவதாகவும், இப்பணிகள் நிறைவடைந்ததும், 2500 கன மீட்டர் வரை பெறப்பட்டு வந்த குடிநீர், 8 ஆயிரத்து 500 கன மீட்டராக அதிகரிக்கப்பட்டு, 24 மணிநேரமும் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள முடியுமென, மன்னார் மதவட்ட தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment