Wednesday, June 13, 2012

24 கோடி ரூபா மோசடியில் ஈடுபட்ட வரி திணைக்கள த்தின் பிரதி ஆணையாளர் விளக்கமறியலில்.

24 கோடி ரூபா 'பெறுமதிசேர்வரி'(VAT) மோசடியில் ஈடுபட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதிவாதிகளான தேசிய இறைவரி திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளரையும், 5 வர்த்தகர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக தேசிய இறைவரி திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளரும், 5 வர்த்தகர்களும் 'பெறுமதிசேர்வரி'(VAT) மோசடியில் ஈடுபட்டதாக சட்டமா அதிபரினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், இதற்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இதனையடுத்து, நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது பிரதிவாதிகளிடமிருந்து வாக்கு மூலம் பெறப்பட்டதுடன், வழக்கு விசாரணை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன் பிரதிவாதிகளை விளக்கமறியலில் வைக்குமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment